Gurpatwant Singh Pannu (Photo Credit: X)

நவம்பர் 19, ஒட்டாவா (World News): 13வது ஐசிசி கிரிக்கெட் கோப்பை 2023 போட்டித்தொடர், இன்று தனது இறுதிக்கட்ட ஆட்டத்தை நிறைவுசெய்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இறுதி உலகக்கோப்பை 2023 தொடரின் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி, மதியம் 12:30 மணியளவில் கொண்டாட்டங்கள் தொடங்கி, 02:00 மணிக்கு டாஸ் போடப்படும். பின் 02:30 மணிக்கு ஆட்டம் நடைபெறும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை 2023-க்காக பலப்பரீட்சை நடத்துகின்றது. ChatGPT Interim CEO Mira Murati: சாட் ஜிபிடி இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முரதி நியமனம்; யார் அவர்?.. விபரம் இதோ.! 

நேரடியாக மைதானத்தில் போட்டியை காண ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதால், குஜராத் மாநிலம் முழுவதும் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இப்போட்டி நடைபெறும் இன்று முதல் சீக்கியர்கள் ஏர் இந்திய விமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என கனடாவில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் குர்பத்வன்ட் சிங் பன்னுன் (Gurpatwant Singh Pannun) முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு கனடாவில் இருந்தபடி, குர்பத்வன்ட் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகக்கோப்பை இறுதிப்போட்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் என விமர்சித்துள்ள அவர், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக செயல்படும் இந்தியாவுக்கு பாடம் புகட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.