YouTube New Monetization Guidelines: யூடியூப் வீடியோ கண்காணிப்பு விதிகள் தளர்வு: தாய்ப்பாலூட்டும் வீடியோ, கவர்ச்சி தழுவல் நடனத்திற்கும் அனுமதி.!
அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, யூடியூப் தனது காணொளியை பிரித்து வழங்குகிறது. இந்த சேவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
நவம்பர் 17, சான் பிரான்சிஸ்கோ (Technology News): கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான YouTube வீடியோ தளத்தை, 2.6 பில்லியன் மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 462 மில்லியன் மக்கள் யூடியூபை பயன்படுத்துகின்றனர். யூடியூப் தளத்தில் நமக்கு தேவையான, தேவையில்லாத பல காணொளிகள் நிறைந்து கிடக்கின்றன.
அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, காணொளியினை பிரித்து வழங்கும் சேவையை யூடியூப் செய்து வருகிறது. இவற்றில் ஆபாசமாக உள்ள காணொளிகள், அதுசார்ந்த ஆடியோ பதிவுகள் ஏராளம் என கூறலாம். நமது தேவையை பொறுத்து, கூகுளின் யூடியூப் (YouTube Videos) பக்கமும் வீடியோவை நமக்கு பரிந்துரை செய்யும்.
இந்நிலையில், யூடியூப் தளத்தில் குழந்தைகளுக்கு தாபாலூட்டும் (Breast Feeding) வீடியோ (குழந்தைகளை மட்டும் காண்பித்தல்), ஆபாசமான கவர்ச்சி நடனம், உடலின் அந்தரங்க உறுப்புகளை தழுவி பதிவிடப்படும் நடன வீடியோவை அங்கீகரித்து, அதுசார்ந்த பயனர்களின் வீடியோவுக்கும் வருமானம் கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு, யூடியூப் வீடியோ தரவுகளின் (YouTube New Monetization Guidelines) படிநிலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. Swim Instructor Sentenced Jail: நீச்சல் பயிற்சி பெயரில் இளம் சிறுமிகள் 11 பேருக்கு பாலியல் தொல்லை, பலாத்காரம்.. பயிற்சியாளருக்கு 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.!
இந்த விதிமுறைகள் கேமிங் சார்ந்த வீடியோக்களுக்கும் பொருந்தும் என்பதால், கவர்ச்சி வீடியோ கேம் வீடியோக்களும் இனி பதிவிட வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் பெண் தனது மார்பக காம்புகளை மறைக்காமல் தாய்ப்பாலூட்டும் வீடியோ, குழந்தைக்கு பாலூட்டும் வீடியோ, பம்பவைத்து தாய்ப்பால் எடுத்தால் தொடர்பான வீடியோவை இனி வருவாயை பெறலாம்.
பெற்றோர்களுக்கு தாய்ப்பாலூட்டும் வீடியோ தொகுப்பு, பலருக்கும் பயனுள்ள உதவியை செய்யலாம் என்பதை பொறுத்து கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், படைப்பாளர்களுக்கு விளம்பர வருவாயை உறுதி செய்யவும், நடனம் சார்ந்த வீடியோ பதிவிடுபவர்கள் இனி கவர்ச்சியான உடையுடன் உடல் உறுப்புகளை தழுவி ஆடும் நடனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இனி அதுசார்ந்த வீடியோ பதிவிடுவோர் வருவாய் பெறலாம்.
அதேவேளையில், எப்போதும் மார்பகம், பிறப்புறுப்பு போன்ற அந்தரங்க பகுதிகள் தொடர்பான நடனம் குறித்த விடியோக்கள் மற்றும் திரும்பத்திருப்ப அச்செயலை செய்தல் போன்றவை குறித்த வீடியோ கட்டுப்படுத்தப்படும் என்றும் யூடியூப் தெரிவிக்கிறது.
(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

