![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/11/Paul-Douglas-Frost-Photo-Credit-@nypost-X-380x214.jpg)
நவம்பர் 17, சிட்னி (World News): ஆஸ்திரேலிய (MasterChef Australia) நாட்டை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் பால் டக்ளஸ் பிரோஸ்ட் (Paul Douglas Frost). இவர் நீச்சல் பயிற்சியாளராக வேலை பார்த்துவந்தபோது, 11 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்காக தற்போது 24 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். சிட்னி நீதிமன்றம் சமையல் கலைஞருக்கு எதிராக அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
தற்போது 48 வயதாகும் பால் டக்ளஸ், 1996ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் தென்மேற்கு சிட்னியில் (Sydney, Australia) செயல்பட்டு வரும் நீச்சல் பயிற்சிப்பள்ளியில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது, தன்னிடம் நீச்சல் பயிலாக வந்த இளம் சிறார்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். 9 வயதுடைய சிறார்களிடம் தொடங்கிய பாலியல் அத்துமீறல், அவரிடம் பயிற்சி பெறும் 16 வயது வரை நடந்துள்ளது. Delhi Shocker: தொழிலாளியின் ஆசனவாயில் கம்பியை திணித்து கொடுமை செய்த கும்பல்: டெல்லியில் பயங்கரம்.!
சிறுமிகளிடம் ஆபாசமாக சுய இன்பம், உடலுறவு குறித்து பேசுதல், நீச்சல் பயிற்சி மையத்தில் உடைமாற்றும்போது திட்டமிட்டு அறைக்குள் நுழைந்து அத்துமீறுதல் என பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்ந்துள்ளது. 11 சிறுமிகளிடமும் அவர் 43 வகையான குற்றங்களை செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சமையல் கலைஞருக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், செப்டம்பர் மாதம் ஸில்வனியாவில் வைத்து கைது செய்தனர். அவரின் வேலைகளையும் பறிபோனது, புகழும் வீழ்ச்சிக்கு வந்தது. இதனையடுத்து, வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிட்னி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் குற்றவாளிககு 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
அவரின் தண்டனைக்காலத்தை எவ்வித பிணை விடுதலைக்கும் இன்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி சாரா, சிறை தண்டனைக்கு பின்னர் ஜூன் 2047ல் மட்டுமே அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்தார்.