நவம்பர் 17, புதுடெல்லி (Technology News): ரியல்மி (Realme), ஓப்போ (Oppo), விவோ (Vivo) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனங்களை நடத்தி வரும் பிகேபி எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (BBK Electronics Corporation) சார்பில் iQOO ஸ்மார்ட்போன் கடந்த 2019ல் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து தொழில்நுட்ப உலகில் பல புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் சீனாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான iQOO, தற்போது iQOO 12 5G ஆல்பா எடிசன் (iQOO 12 5G Alpha Edition) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. YouTube New Monetization Guidelines: யூடியூப் வீடியோ கண்காணிப்பு விதிகள் தளர்வு: தாய்ப்பாலூட்டும் வீடியோ, கவர்ச்சி தழுவல் நடனத்திற்கும் அனுமதி.!
iQOO 12 5G Alpha Edition ஸ்மார்ட்போன் 12 டிசம்பர் அன்று முதல் விற்பனைக்கு சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. iQOO 12 5G ஸ்மார்ட்போனில், ஸ்னாப்ட்ரகன் 8Gen 3 Flagslip ப்ராசசர் உள்ளது. இதனால் முந்தைய ஸ்மார்ட்போன்களை கூடுதல் செயல்திறனை கொண்டுள்ளது.
அதேபோல, 3 நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் iQOO 12 5G Alpha Edition ஸ்மார்ட்போன், சந்தையில் Amazon.com மற்றும் iQOO.com ஆகிய தளங்களிலும் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை, கேமரா, பேட்டரி உட்பட பிற அம்சங்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
From the blackness comes a lightning-fast racing car that leaves all its competition behind, unleashing the #iQOO12 - Alpha Edition 🖤 🚀 Launching only on @amazonIN & https://t.co/ZK4Krrdztq
Know More: https://t.co/0rC6Ys3QFB#AlphaEdition #PremiumPerformance #AmazonSpecials pic.twitter.com/Fyc1EinMpD
— iQOO India (@IqooInd) November 17, 2023