மே 25, சான் பிரான்சிஸ்கோ (San Francisco): முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் (Facebook, WhatsApp, Instagram) உட்பட பல சமூக வலைதள நிறுவனங்களை நடத்தி வரும் மெட்டா (Meta) குழுமம், அவ்வப்போது தனது வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்தின் வளர்ச்சியில் செயல்திறனை அதிகரிக்க, பழைய வேலையாட்களை பணிநீக்கம் செய்துவிட்டு தகுதியுடைய புதிய நபர்களை பணியில் அமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Swiggy-Zomato Troll Naveen-ul-Haq: மண்ணைக்கவ்விய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி; நவீனை வச்சி செய்யும் ஜுமாடோ, ஸ்விக்கி நிறுவனங்கள்.!
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தானியங்கு செயல்திறன் இயந்திரங்களை (AI Robots) தேவையான பணியில் நியமனம் செய்யவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மெட்டா உலகளவில் 6 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 10 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டின் செயல்திறனை அதிகரிக்க மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மெட்டா நிறுவனம் உலகளவில் 86 ஆயிரம் பணியாளர்களை வைத்து செயல்பட்டு வருகிறது.