ஜனவரி 25: உலகளவில் நாளொன்றுக்கு 220 மில்லியன் பயனர்களை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் கொண்டுள்ளது. வீட்டில் இருந்தபடி வேலை செய்வோராக இருந்தாலும் சரி, அலுவலககங்களில் பணியாற்றுவோராக இருந்தாலும் கணினியில் மைக்ரோசாப்டின் பங்கு என்பது தவிர்க்க இயலாதது ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் MS Teams, Outlook Mail, Azure மற்றும் Microsoft 365 போன்ற பிற செயலிகள் சேவையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று மேற்கூறிய செயலிகள் செயல்பாடுகள் தடைபட்டுள்ளதால், அதன் உபயோகிப்பாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் மேற்கூறிய பிரச்சனை பெருமளவு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பிரச்சனை சரிசெய்யப்படும் என Microsoft 365 தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Kamal Hassan Supports DMK Alliance: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல் ஹாசனின் ம.நீ.ம பரிபூரண ஆதரவு.. நண்பரின் வெற்றிக்கு உழைப்போம் – கமல் ஹாசன் உறுதி.!
We're investigating issues impacting multiple Microsoft 365 services. More info can be found in the admin center under MO502273.
— Microsoft 365 Status (@MSFT365Status) January 25, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)