Kamal Hassan on Press meet (Photo Credit: ANI)

ஜனவரி 25, சென்னை: ஈரோடு கிழக்கு (Erode East) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா (Thirumagan EVRa) மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் (Erode East By Poll) அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (EVKS Elangovan) வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் (AIADMK Alliance) கூட்டணி கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாமக (PMK) தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பங்கேற்கவில்லை, எவருக்கும் ஆதரவும் இல்லை என அறிவித்துவிட்டது. தேமுதிக (DMDK) தனது ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam - MNM Party) கட்சியின் தலைவர் கமல் ஹாசன் (KamalHassan) செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவளிக்க நானும், எனது கட்சியினரும் முடிவு செய்து எங்களின் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். Andrea Jeremiah: ஜாலியாக வெகேஷனில் என்ஜாய் செய்யும் நடிகை ஆண்ட்ரியா.. அசத்தல் கிளிக்ஸ் வெளியீடு.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனது நண்பர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெற வைக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காள பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன். நண்பர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் உழைப்போம்.

இந்த நிலை என்பது அவசர நிலை. இடைத்தேர்தல் தமிழகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு கைகூடிவியக்கூடாது என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. என் மனதில் இருந்து வருவதே எனது அரசியல். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும். இம்முடிவு என்பது தற்போதைக்கு மட்டுமே" என தெரிவித்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 25, 2023 01:23 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).