Masturbation With Help of AI: செயற்கை நுண்ணறிவால் கையை உபயோகம் செய்யாமலேயே சுய இன்பம்.. அசத்தல் கண்டுபிடிப்பின் விபரம் இதோ..!
அதனால் கண்டுபிடிப்புகளை குறை சொல்லலாகாது.
ஜூலை 26, தொழிநுட்பம் (Technology News): சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகி இருப்பது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். ஆங்கிலத்தில் Artificial Intelligence என்று அழைக்கப்படும் மென்பொருளின் வழியே, நமது வாயமொழி உத்தரவுகளை கவனித்து செயல்களை செய்யும் வகையிலான தொழில்நுட்ப முன்னேற்றம் நல்ல வரவேற்பை பெறுகிறது.
அதேபோல, பணியிடங்களில் மனிதர்கள் செய்யும் வேலைகளை எவ்வித பிரச்சனையும் இன்றி மேற்கொண்டு வரும் AI இயந்திரங்கள், சர்வதேச அளவிலான உலக நாடுகளிடம் உள்ள முன்னணி நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் கூட AI தொழில்நுட்ப ரோபோ பெண் செய்தி வாசிப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டதும் சமீபத்தில் நடந்தது.
மனிதர்களின் எதிர்காலத்தை கட்டமைக்கும் பணியில் முக்கிய இடத்தை பெறப்போகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பலரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க தொடங்கிவிட்டனர். இவை சர்வதேச அளவில் எவ்வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது எதிர்காலத்தில் தெரியவரும். இந்நிலையில், பாலியல் பொம்மைகள் என்பது இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று. Forest Fire: ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெயில்; பற்றி எரியும் காடுகள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது.!
சில நாடுகளில் இவற்றுக்கு அனுமதி உண்டு. இவற்றை வைத்து ஆணோ, பெண்ணோ தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்கின்றனர். சுய இன்பம் மேற்கொள்ள நினைக்கும் நபர்களுக்கும் இவ்வாறானவை உதவுகின்றன. இந்தியாவில் திரைமறைவில் பாலியல் பொம்மைகளின் இறக்குமதியும் நடக்கிறது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுய இன்பம் மேற்கொள்ள உதவும் நபர், தனது கைகளை உபயோகம் செய்யாமலேயே சுய இன்பம் மேற்கொண்ட உணர்வை வழங்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Brian Sloan என்ற நபர் சுய இன்பம் செய்யும் செயற்கை நுண்ணறிவு கருவியை கண்டறிந்து இருக்கிறார்.
தலையில் இணைக்கப்படும் கருவியானது நமது மூளை நரம்புகளுக்கு (Electroencephalography-EEG) சிக்னலை அனுப்பி, நமது கைகளுக்கு எவ்வித வேலையும் வைக்காமல் உணர்திறனை நேரடியாக பாலியல் வேட்கைக்கு தூண்டி, அதனை உச்சக்கட்டத்திற்கு செல்ல வைக்கிறது. இக்கருவியின் முதற்கட்ட சோதனைகள் அனைத்தும் வெற்றியில் முடிந்துள்ளதாக அதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.
மனிதனின் வேலைகளை குறைக்க புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் எனினும், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உலகில் யாரோ ஒருவருக்காக உதவி செய்கிறது. அதனால் கண்டுபிடிப்புகளை குறை சொல்லலாகாது.