Sri Lanka Floods (Photo Credit : @PTI_News X)

நவம்பர் 28, இலங்கை (Sri Lanka News): இலங்கை நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பல நகரங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனிடையே கும்பக்கரை பகுதியில் சாலை ஒன்றில் சென்ற பேருந்தை வெள்ளம் அடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக விரைந்த மீட்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். மற்றொரு பகுதியில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாளைய வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. தமிழகத்தில் ரெட் அலர்ட்.. புயல் காற்றுடன் விளாசப்போகும் கனமழை.!

நிலச்சரிவில் பலர் மாயம்:

இதனைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளும் இடிந்து தரைமட்டமான நிலையில், மக்கள் பலரும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரும் மாயமாகி இருக்கின்றனர். இதனால் மீட்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 6000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். டிட்வா புயலின் (Tidva Cyclone) காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து புயல் மேலும் வலுப்பெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இலங்கையில் வெள்ளத்தால் மக்கள் அவதி: