டிசம்பர் 23, புதுடெல்லி (Technology News): இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில், குறுகிய காலத்தில் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பிரபலமடைந்த நிறுவனம் ஓப்போ (Oppo India). சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓப்போ நிறுவனம், சமீபத்தில் தனது புதிய ஸ்மார்போனை அறிமுகம் செய்தது.
ஓப்போ ஏ59 5ஜி (Oppo A59 5G): ஓப்போ ஏ சீரிஸ்களில் பல்வேறு ஸ்மார்ட்போன் வந்தாலும், வாடிக்கையாளரின் பட்ஜெட் மற்றும் பிற சாராம்சங்களை கருத்தில் கொண்டு தற்போது வெளியிட்டுள்ள ஓப்போ கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக களமிறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி முதல் அதன் விற்பனையும் அறிமுகமாகிறது.
சிறப்பம்சங்கள்: மீடியாடெக் Dimensity 6020 சிப்செட், 6.56-இன்ச் எச்.டி+ 90Hz LCD Screen, 13 MP Rear கேமிரா, 2MP சென்சார், 8 MP செல்பி கேமிரா, Fingerprint Scanner போன்றவையும் இடம்பெற்றுள்ளன. அதேபோல, 5000 mAh பேட்டரி, 33W SuperVOOC டைப்-சி சார்ஜர் வழங்கப்படுகிறது. Pornhub try To Resolve Sex Trafficking: சிறார்களுக்கு எதிரான மற்றும் கட்டாயப்படுத்திய பாலியல் உறவு வீடியோ குற்றவாளிகளை கைது செய்ய உதவும் போர்ன் ஹப்: அதிரடி அறிவிப்பு.!
விலை விபரங்கள்: இந்தியாவில் ஓப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999ல் இருந்து தொடங்குகிக்கிறது. பிளாக், சில்க் கோல்ட் நிறங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. 4GB + 128GB மாடல் ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கும், 6GB + 128GB மாடல் ரூ.16,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்பதிவு செய்ய / வாங்க: நேரடியாக ஸ்மார்ட்போன் விற்பனை கடைகளிலும், அமேசான், பிளிப்கார்ட், ஓப்போவின் விற்பனை தளத்திலும் ஓப்போ ஏ59 ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம். கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் விற்பனை தொடங்குகிறது. இதனால் அன்றைய நாளில் இருந்து டெலிவரி செய்யப்படும்.
Prepare for the reveal of the OPPO A59 5G, designed to steal the spotlight with its unique and elegant design!
Coming Soon! pic.twitter.com/Xhr3OPQMQe
— OPPO India (@OPPOIndia) December 20, 2023