Tecno Price Updates: அசத்தலான வடிவமைப்பில், ஆச்சரியமூட்டும் விலையில் வெளியாகியிருக்கும் டெக்னோ மொபைல் போன்…!
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா ப்ரோ 5 மொபைல் போன்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 14, புதுடெல்லி (Technology): கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெக்னோ போவா 4 இன் வெற்றிகரமான விற்பனையைத் தொடர்ந்து கடந்த வாரம் அந்நிறுவனம் டெக்னோபோவா 5 (Tecno Pova 5) மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) மாடல்களின் விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. தற்போது இந்த மொபைல் போன்களின் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டெக்னோ போவா 5 மாடல் 8 ஜிபி ரேம் (8 GB RAM), 20 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷரேட் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டது. இந்த மாடல் ஹரிகேன் ப்ளூ (Hurricane blue), மெக்கா பிளாக் (Mecha Black) மற்றும் அம்பர் கோல்டு (Amber gold) கலர்களில் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூபாய் 14,999 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. Sachin Tendulkar: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 90-களில் இன்றைய நாளில் செய்த அசத்தல் சாதனை.!
டெக்னோ போவா 5 ப்ரோ மாடல் முழு ஹெச் டிஸ்ப்ளே (HD display) வசதியுடன் 6.78 இன்ச் (6.78 inch) இல் அமைந்துள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி (128 GB) ஸ்டோரேஜ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷரேட் கொண்ட இந்த மொபைல் போன் அட்டகாசமான டிஸ்ப்ளே அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை ரூபாய் 14,999 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வகையின் விலை ரூபாய் 15,999. டெக்னோபோவா 5 ப்ரோ டார்க் இல்யூஷன் (Dark Illusion) மற்றும் சில்வர் ஃபேண்டஸி (Silver fantasy) நிறங்களில் விற்பனைக்கு உள்ளது.
இந்த இரண்டு மொபைல் போன்களும் வருகின்ற 22 (August 22) ஆம் தேதி பிரத்தியேகமாக அமேசானில் (Amazon) விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல் ஃபோன்களை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்டில் (discount) வாங்கிக்கொள்ளலாம் மற்றும் 6 மாத இஎம்ஐ (EMI) வசதியும் உண்டு.
(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 09:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

