மே 25, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி GT 6T (Realme GT 6T) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கேமிங் சிறப்பு வசதி கொண்ட இந்த போன், சமீபத்திய Qualcomm Snapdragon 7+ Gen 3 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் மற்றும் மொபைல் கேமிங் ஆகியவற்றிக்கு சிறந்த செயல்திறனை வழங்கும். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இதில் பார்ப்போம். Problems Caused By Stress: அதிக மன அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன..? விவரம் இதோ..!
சிறப்பம்சங்கள்: ரியல்மி GT 6T, 6.78-இன்ச் 1.5K (2780 x 1264 பிக்சல்கள்) LTPO AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும், மிகவும் மென்மையான 120Hz புதுப்பிப்பு வீதத்தில், 360Hz டச் சாம்ப்ளிங் வீதத்துடன் ஒவ்வொரு தொடுதல் மற்றும் தள்ளுதல்கள் செயல்படுவதையும் எளிதாக வைக்கிறது. அதிகபட்சமாக 6,000 நிட்ஸ் பிரகாசத்தைக் கொண்டுள்ளது. Corning Gorilla Glass Victus 2 போனிற்கு பாதுகாப்பை வழங்குகின்றது. இதில், சக்திவாய்ந்த Snapdragon 7+ Gen 3 SoC, 12GB வரையிலான LPDDR5X RAM மற்றும் 512GB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 5,500mAh பேட்டரி திறன் கொண்ட, 120W SuperVOOC சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்துள்ளது. இதில், பின்புறத்தில் 50MP Sony IMX882 பிரைமரி சென்சார் கொண்ட dual கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை Realme UI 5.0 உடன் இயக்குகின்றது.
விலை: இவை Fluid Silver மற்றும் Razor Green என இரண்டு விருப்ப நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட் போன் 4 உள்ளமைப்புகளில் கிடைக்கின்றது, அடிப்படை 8GB RAM+128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.24,999 முதல் விலை ஆரம்பமாகிறது.