மே 25, சென்னை (Health Tips): நம் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உள்ளன. அதில் கடின வேலை, மோசமான வாழ்க்கை முறை, தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் சிக்கல்கள் மற்றும் திருமண பிரச்சினைகள் என நம்மை தொந்தரவு செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனஅழுத்தத்துடன் (Stress) தொடர்புடையதாக உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு வாழ்க்கையில் வரும் அனைத்துவிதமான அழுத்தங்களும் சிக்கல்களும் ஒட்டுமொத்தமாக ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவை நீண்ட காலம் மனஅழுத்தத்துடன் வாழும் போது, நமக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிக மன அழுத்தம் உடல்நலத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம். School Boy Murder: 9 வயது சிறுவன் படுகொலை; விடுதியில் தங்கி படித்த சக மாணவர் கைது..!
தூக்கமின்மை (Insomnia): அதிக மன அழுத்தம் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு இரவு தூக்கம் மிக மோசமாக இருக்கும். தொடர்ச்சியாக மனஅழுத்தத்தில் இருக்கும்போது, நன்றாக தூங்க முடியாது.
மாரடைப்பு (Heart Attack): மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது இதயமும் வேகமாக துடிக்கிறது. மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த நாளங்களை சுருக்கி, தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜனை திருப்பி விடுகின்றன. எனவே, இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு வர வழிவகுக்கிறது.
உயர் இரத்த சர்க்கரை அளவு (High Blood Sugar Level): மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் வெளியீடுகளைத் தூண்டுகிறது. இதன்காரணமாக டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் உண்டாகிறது. நீண்டகால மன அழுத்தத்தில் இருந்தால், உடலால் கூடுதல் குளுக்கோஸ் உயர்வை சமாளிக்க முடியாமல், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல் (Constipation): ஹார்மோன்களின் அவசரம், விரைவான சுவாசம் மற்றும் வேகமான இதய துடிப்பு ஆகியவை செரிமான அமைப்பை பாதிக்கின்றது. வயிற்றில் அமிலம் அதிகரிப்பதால் நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான மன அழுத்தம் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும்.
மாதவிடாய் கோளாறு (Menstrual Disorder): அதிக மன அழுதத்தில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் நிகழும். இதன்காரணமாக வெளியிடப்படும் ஹார்மோன்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதிக மனஅழுத்தம் ஒரு எல்லையைக் கடக்கும்போது, அது முற்றிலுமாக மாதவிடாயை நிறுத்தும் அபாயம் உள்ளது.