Rolls Royce Layoff: 2,500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.! அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

கடந்த 1904ம் ஆண்டு கார் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு பணிகளுக்காக தொடங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், இன்று வரை தனித்துவமான கட்டமைப்புகள் காரணமாக நிலைத்து நிற்கிறது.

Rolls Royce (Photo Credit: @IANS India Twitter)

அக்டோபர் 17, இலண்டன் (Technology News): சர்வதேச அளவில் விலைஉயர்ந்த கார்களை தயாரித்து வழங்கும் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce). பிரத்தியேகமாக தனது தயாரிப்பின் ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து, பார்த்து தயாரித்து வழங்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தரத்திற்கு புகழ்பெற்றவை ஆகும்.

கடந்த 1904ம் ஆண்டு விமான பாகங்கள் மற்றும் கார் தயாரிப்பு பணிகளுக்காக தொடங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், இன்று வரை தனித்துவமான கட்டமைப்புகள் காரணமாக நிலைத்து நிற்கிறது. அதேபோல, விமான பாகங்களையும் தயாரித்து வழங்குகிறது. கட்டுமான பணிகளையும் மேற்கொள்கிறது. National Film Awards Best Actor: சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை தட்டிச்சென்றார் நடிகர் அல்லு அர்ஜுன்; புஷ்பா னா பயர் தான்.! 

இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டனை மையமாக வைத்து செயல்படும் இந்நிறுவனம், தற்போது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை காரணமாக 2,500 பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்து அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் 2500 பேர் வரை அதிரடியாக பலரும் பணிநீக்கம் செய்யப்படலாம் என அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த அறிவிப்பு அந்நிறுவன பணியாளர்களிடையே லேசான கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement