Best Actor National Film Awards 2023 (Photo Credit: @ANI Twitter)

அக்டோபர் 17, புதுடெல்லி (Cinema News): சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021 ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா: தி ரூல் (Pushpa The Rule).

இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா, ஜெகதீஷ் பிரதாப், மைம் கோபி, ராவ் ரமேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

ரூ. 170 கோடி பொருட்செலவில் உருவான திரைப்படம், ரூ.400 கோடியை கடந்து வசூல் செய்தது. மேலும், இப்படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம், மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.

புஷ்பா படத்தில் இருந்த ஊ சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பட்டிதொட்டியெங்கும் பரவின. தற்போது, மத்திய அரசால் திரைத்துறையில் சிறந்து செயல்பட்ட நபர்களுக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்படுகிறது. Hrithik Roshan 6 Pack: 5 வாரத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் - மாஸ் காட்டும் ஹிருத்திக் ரோஷன்.! 

சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தில் நடித்ததற்காக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளில் இருந்து பெற்றுக்கொண்டார். புஷ்பா படத்தின் 2ம் பாகம் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் செம்மரக்கடத்தல், அதன் பின்னணியில் செயல்படும் அரசியல் மற்றும் ரௌடிகள் குழு என அதிரடி காட்சிகளை கொண்டு வெளியான திரைப்படம், அங்குள்ள மக்களின் வாழ்வியலை ஒன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.