China’s Artificial Sun: சூரியனுக்கே போட்டி! சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்.. செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள சீனா..!

செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

China’s Artificial Sun: சூரியனுக்கே போட்டி! சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்.. செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள சீனா..!
Sun (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, பெய்ஜிங் (Technology News): உலக அளவில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் கருவிகள் வந்துவிட்டதால் மின் தேவை இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க மின் உற்பத்தியை அதிகரிக்க சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். அதன்படி சீனா மின்சாரத்தை நியூக்ளியர் ஃப்யூஷன் முறையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகச் சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக் கதிர்வீச்சு எதுவும் வெளிப்படாது.நம்முடைய சூரியன் இயங்குவது இந்த முறையில்தான். GSLV-F15: விண்ணில் பாயவுள்ள ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட்.. இனி பேரிடர் காலங்களில் வெளியாகும் துல்லியத் தகவல்..!

செயற்கை சூரியன் (Artificial sun):

ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் 'செயற்கை சூரியன்' என்றும் கூட அழைக்கிறார்கள். சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ். ஆனால் சீனா தயாரித்து வரும் இந்த செயற்கை சூரியனின் வெப்பநிலை 100 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் ஆகும். இயற்கையான சூரியனை விட இதன் வெப்பம் 6 மடங்கு அதிகமானது. இந்நிலையில், நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் மின் உற்பத்தி செய்ய முடிந்தால் வெற்றிகரமான சாதனையாக இருக்கும். சீனாவின் இந்தச் சாதனம் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும் அறிவியலின் அடுத்தகட்டத்துக்கு இந்தத் திட்டம் ஒரு படியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).