Amazon Great Indian Festival 2024: அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2024.. எப்போது தெரியுமா?!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது.

செப்டம்பர் 18, சென்னை (Technology News): பண்டிகைக் காலத்தைக் கொண்டாட அமேசான், தனது தள்ளுபடி விற்பனையை துவங்கிவிட்டது. Amazon.in இல் பண்டிகை கால சிறந்த சலுகைகள், அட்டகாசமான சேமிப்பு என கவர்ச்சிகரமான திட்டங்களுடன் 5,000 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2024இல் (Amazon Great Indian Festival) பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான விற்பனையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் கடைகளில் இருந்து 24 மணிநேரம் முன்னதாகவே ஷாப்பிங் செய்யலாம். எனவே, பொதுமக்களுக்கு செப்டம்பர் 27 முதல் என அறிவிக்கப்பட்டுள்ளது. Jio Down: முடங்கிய ஜியோ நெட்வொர்க்.. கால்கள், மெசேஜ், நெட் எதுவும் ஒர்க் ஆகலயாம்.. பயனர்கள் அவதி.!
இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா 5G, கேலக்ஸி S24 5G, கேலக்ஸி Z Flip6 5G, கேலக்ஸி Z Fold6 5G போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், கேலக்ஸி A35 5G, கேலக்ஸி A55 5G, ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, நார்டு சிஇ 4 லைட், நார்டு CE4, ஐக்யூ Z9s 5G, ஐக்யூ Z9s ப்ரோ 5G, ஐக்யூ Z9 5G, ஐக்யூ Z9 லைட் 5G, ஐக்யூ Z9x 5G, ஐக்யூ Neo 9 ப்ரோ 5G, போக்கோ X6 Neo 5G, போக்கோ C65, போக்கோ M6 5G, போக்கோ M6 ப்ரோ 5G மற்றும் பல மாடல்களில் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். இதேபோல், விற்பனையின் போது மொபைல் பாகங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளனர்.
எலக்ட்ரானிக்ஸ் தவிர, விமான டிக்கெட்டுகள், ரயில் மற்றும் பஸ் கட்டணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் உள்ளிட்ட பயண முன்பதிவுகளிலும் கஸ்டமர்கள் தள்ளுபடியைப் பெற முடியும் என்று அமேசான் அறிவித்துள்ளது. மேலும், கூடுதல் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பங்களும் இந்த விற்பனையின் போது கிடைக்க உள்ளது. அதுமட்டுமின்றி அமேசான் பே மற்றும் பே லேட்டர் பயன்படுத்துவோர்க்கான கட்டண சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் கிரேட் இந்தியன் சேல்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)