செப்டம்பர் 17, சென்னை (Technology News): இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் திட்டத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை ஜூலை 2024 யில் உயர்த்தியது. இதற்கிடையே இன்று நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜியோ டெலிகாம் தளம் முடங்கியுள்ளது. டவுன் டிடெக்டரில் ஒரு மணி நேரத்திற்குள், ஜியோ சேவைகள் நிறுத்தப்பட்டதாக 10,000 பயனர்கள் புகார் அளித்துள்ளனர். Verizon Layoffs: வெரிசோன் நிறுவனம் 5,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா..? ஊழியர்கள் அதிர்ச்சி..!
அவர்களில் 67 சதவீதம் பேர் ஜியோ நெட்வொர்க் சிக்னல் இல்லை என்றும், 20 சதவீதம் பேர் மொபைல் இன்டர்நெட் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் 14 சதவீதம் பேர் ஜியோ ஃபைபர் வேலை செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல சிலர் தங்களால் போன் செய்ய முடியவில்லை என்றும், சிலர் மெசேஜ் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஜியோடவுன் (Jio down)என்ற ஹாஷ் டேக்கின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.