ஜனவரி 27, புதுடெல்லி (Technology News): ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் (GSLV-F15) மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் வருகின்ற 29ம் தேதி காலை 6.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. Scam Alert: தமிழக பெற்றோர்களே வங்கிக்கணக்கு, ஒடிபி கேட்டு போன் வருகிறதா? மோசடி செயல்.. உஷார்.!
ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் (GSLV-F15):
பூமியை கண்காணித்து பூமியில் உள்ள பருவநிலை மாற்றம், வானிலை மாற்றங்கள், நிலங்கள், கடல், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து எதிர்காலத்தில் வரக்கூடிய இயற்கை பேரிடர்களை முன்பே கணித்து சொல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது. ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இந்த விண்கலம் இஸ்ரோவின் 100வது விண்கலமாகும்.