Google (Photo Credit: PIxabay)

ஏப்ரல் 23, கலிபோர்னியா (California): அக்டோபர் மாதம் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் (Israel Hamas War), தற்போது வரை நடைபெற்ற வருகிறது. போரின் தொடக்கத்தில் ஹமாஸ் செய்த பயங்கரவாத செயலின் காரணமாக, இஸ்ரேல் தற்போது வரை தனது முழு பலத்தையும் அமெரிக்காவின் உதவியுடன் பாலஸ்தீனியத்திற்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. போரின் உச்சகட்ட தன்மையால் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

உலக நாடுகளில் கருத்து மோதல், மத்திய கிழக்கில் ஆயுதங்களுடன் மோதல்: இதனால் உலக நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை ஒருபுறம், பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக கோரிக்கை வைக்கும் நாடுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கருத்துக்கள் மற்றொருபுறம் என பல நாடுகளில் சர்ச்சைக்குரிய மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. Madurai Chithirai Festival 2024: பாரம்பரியப்படி நீரை பீய்ச்சி களைகட்டிய கொண்டாட்டம்; மதுரை சித்திரைத்திருவிழாவில் கோலாகலம்.! 

20 கூகுள் பணியாளர்கள் பணிநீக்கம்: இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் கூகுள் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கிளவுட் கம்ப்யூட்டிங் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, போராட்டத்தை முன்னெடுத்த பணியாளர்கள் (Google Fires Employees) அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் கூகுள் சிஇஓவாக செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சைக்கு எதிராக, இஸ்ரேல் எதிர்ப்பாளர்கள் தங்களின் கண்டனங்களை குவித்து வருகின்றனர். பணிநீக்கங்கள் குறித்து விளக்கம் அளித்த சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராக பணியாளர்கள் செயல்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.