ஏப்ரல் 23, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் பெரும் திரளாக சிறப்பிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (Meenakshi Amman Temple) சித்திரை திருவிழா (Chithirai Festival 2024) வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொண்டாட்டங்களின் திருவிழா: கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி முதல் திருவிழா கொடியேற்றப்பட்டு, நேற்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபோகம் நடைபெற்றது. இடையில் உள்ள ஒவ்வொரு நாள் திருவிழாவும் மக்களால் கோலாகலமான கொண்டாட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டு தற்போது சித்திரை திருவிழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. Anaconda Smuggling from Thailand: பெங்களூர் விமான நிலையத்தை பதறவைத்த இளைஞர்; 10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல்.! 

பாரம்பரியப்படி சிறப்பிப்பு:  நேற்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபோகம் நடைபெற்ற நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் நின்று கொண்டு தங்களின் மீது பாரம்பரியப்படி நீரை ஒருவரின் மீது ஒருவர் தெளித்து ஆனந்தமாக நிகழ்வுகளை சிறப்பித்தனர். இது தொடர்பான வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

தூங்கா நகரம் என்ற அடைமொழியை கொண்ட மதுரை மாநகரம், நேற்று மக்கள் வெள்ளத்தில் தூங்காமல் கொண்டாட்டத்தில் திளைத்து இருந்தது.