Ulefone Armor 25T Pro (Photo Credit: @iam_chonchol X)

மே 27, புதுடெல்லி (New Delhi): யூலிஃபோன் (Ulefone) பிராண்ட் இப்போது அதன் ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged Smartphone) வரிசையில் புதிதாக யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ (Ulefone Armor 25T Pro) என்ற சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ மொபைல் 6.78" இன்ச் முழு எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை வழங்குகிறது. இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Gorilla Glass Victus) பாதுகாப்பை பெறுகிறது. Crocodile In VVIP Area: விவிஐபிக்கள் வீட்டிற்குள் புகுந்த முதலையார்; தலைதெறிக்க ஓட்டம்பிடித்த சம்பவம்.!

இதில் உயர்தர தெர்மல் கேமரா (Thermal camera) உள்ளது. இது -20°C to 550°C வரையிலான ஹீட் சிக்னேச்சர்களை டிடெக்ட் செய்கிறது. தெர்மல் கேமராவுடன் 64MP நைட் விஷன் கேமரா (OmniVision OV64B1B) இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் 33W மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த சாதனம் பிளாக் ஃபிரோஸ்ட் நிறத்துடன் 300 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 24,900 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.