Vivo S18 Smartphone: விவோ நிறுவனத்தின் எஸ்18 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?.. விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிப்பு.!
Vivo S18 (Photo Credit: YouTube)

டிசம்பர் 04, சென்னை (Chennai): விவோ நிறுவனத்தின் விவோ எஸ்18 ஸ்மார்ட்போன், டிசம்பர் 14ம் தேதி சந்தைகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது. சீனாவில் முதலில் விற்பனை அறிமுகம் செய்யப்படுவது, விவோ நிறுவனத்தின் அறிவிப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவோ எஸ் 18 & எஸ் 18 ப்ரோ: இந்தியாவில் விவோ நிறுவனத்திற்கு விற்பனை சந்தை வரவேற்பு பெற்றது என்பதால், இந்திய சந்தைகளிலும் விவோ எஸ்18 மற்றும் எஸ்18 ப்ரோ (Vivo V18 & V18 Pro) ஸ்மார்ட்போன்கள் அதிகளவு எதிர்பார்க்கப்படுகின்றன. போட்டோகிராபி விஷயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு, அதற்கேற்ப ஸ்மார்ட்போன் தயார் செய்யப்பட்டுள்ளது. Cars Swept Away by Floods: தொடர் கனமழை எதிரொலி: பள்ளிக்கரணை, வேளச்சேரியில் சூழ்ந்த வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட கார்கள்..! 

சிறப்பம்சங்கள்: ஸ்னாப்ட்ரகன் 7 ஜென் 3 ப்ராசசர், மீடியாடெக் டிமென்சிட்டி 9200 ப்ராசசர், OLED டிஸ்பிளே, 120 HZ புதுப்பிப்பு திறன் உட்பட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கருப்பு, நீலம், Huaxia சிவப்பு, கடல் பச்சை ஆகிய நிறங்களில் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும்.

டிசம்பர் 14ல் விற்பனைக்கு அறிமுகம்: 80W சார்ஜர், 4,800 mAh பேட்டரி திறன், 50 MP பிரைமரி கேமிரா, 50 MP பேக் கேமிரா, Sony IMX920 சென்சார்கள் ஆகிய தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 14 அன்று மதியம் 2 மணியளவில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதனை விவோ இணையப்பக்கத்திலும் புக்கிங் செய்து பெற்றுக்கொள்ளலாம்.