Chennai Rain 2023 | Velachery Flood (Photo Credit: @HTTimes X)

டிசம்பர் 04, சென்னை (Chennai): வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மிக்ஜாங் புயலாக உருவானது. இந்த புயலுக்கு மியான்மர் பரிந்துரை செய்தபடி மிக்ஜாங் (Cyclone Michaung) என பெயரிடப்பட்டது. இந்த புயல் நாளை ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

கொட்டிதீற்கும் கனமழை: இதனால் நேற்று முதலாகவே தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

ஸ்தம்பித்தது சென்னை: நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள காரணத்தால், சென்னையின் முக்கிய போக்குவரத்துகள் ஸ்தம்பித்துள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை வரவேண்டிய விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. Yash 19 Movie Update: நடிகர் யாஷின் 19வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஷாக்கிங் சர்ப்ரைஸால், கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்..! 

பாதுகாப்பு முகாம்கள்: 142 இரயில்கள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி - கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சமையல் கூடங்களும், முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்: இந்நிலையில், வேளச்சேரி - பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளமானது சூழ்ந்துள்ளது. குடியிருப்பு வாசிகள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பினும், வீதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.