Elon Musk X Platform (Photo Credit: Twitter)

அக்டோபர் 19, இலண்டன் (Technology News): எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கி, அதற்கு எக்ஸ் என பெயரிட்டு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப பயன்பாடு ரீதியாகவும் தொடர் மாற்றங்கள் வந்தவண்ணம் உள்ளன.

முக்கிய புள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புளூ டிக், பின்னாளில் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. பயனர்களின் ட்விட்டர் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பணம் செலுத்துவோருக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டது. Chennai Shocker: 33 வயதாகியும் வேலை, திருமணம் அமையவில்லை - விரக்தியில் இளைஞரின் விபரீத செயலால் கண்ணீரில் உறவினர்கள்.! 

உலகளவில் இதனால் ட்விட்டர் பயனர்கள் அதிருப்தியானாலும், இலவச பயன்பாடு தொடருவதால் மக்கள் அதனை உபயோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், எலான் மஸ்க் ஐரோப்பிய நாடுகளில் ட்விட்டர் சேவையை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதாவது, சமூக ஊடக செயலிகளுக்கான வரைமுறைகள், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சட்டமாக வடிவமைக்கப்பட்டு புதிய Digital Services Act நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ட்விட்டரின் மீது பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு வித்திட்டது. இதனால் எலான் மஸ்க் தனது சேவையை ஐரோப்பிய யூனியனில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.