அக்டோபர் 19, மண்ணிவாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம், மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் அசோக் (வயது 33). இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். தற்போது வேலை படிப்புக்கான வேலை தேடி வந்துள்ளார்.
ஆனால், அசோக்குக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தால், கிடைத்த வேலைகளை செய்து பின் மனஉளைச்சலில் வேறு வேலை செய்வது என ஆண்டுகள் கடந்துள்ளது.
இதற்கிடையில், அசோக் - அவரின் உறவினர் பெண் ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், இறுதியில் அத்திருமணமும் தடைபட்டு இருக்கிறது.
இதனால் வாழ்க்கையின் மீது விரக்தியடைந்த அசோக், மனஉளைச்சலில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் தனது இருசக்கர வாகனத்தில் சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். CWC 2023 IND Vs BAN: இந்தியா – வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெறுகிறது.. முழு விபரம் இதோ.!
இரயில் நிலைய வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியவர், அவ்வழியே வந்த அதிவேக இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாம்பரம் இரயில்வே காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், பலியானவர் மேற்கூறிய அசோக் குமார் என்பதும், திருமணம் ஆகாதது, வேலை கிடைக்காதது என விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் அவரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.