Pakistan Terrorist Attack: பேருந்தை வழிமறித்து ஈவு-இரக்கமின்றி சரமாரியாக துப்பாக்கிசூடு; 23 அப்பாவி பொதுமக்கள் பலி.. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டகாசம்..!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan Terrorist Attack: பேருந்தை  வழிமறித்து ஈவு-இரக்கமின்றி சரமாரியாக துப்பாக்கிசூடு; 23 அப்பாவி பொதுமக்கள் பலி.. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டகாசம்..!
Pakistan Terrorist Attack (Photo Credit: @MalikIrfanFanu1 X)

ஆகஸ்ட் 26, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (ஆகஸ்ட் 26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் (Terrorists) வழிமறித்தனர். பின்னர், இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு பயங்கரவாதிகள் கொண்டு சென்று, சுட்டு படுகொலை (Gunshot Murder) செய்தனர். இதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். Sunita Williams: 8 நாட்கள் பயணம், 8 மாதத்தை கடக்கும்.. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் விபரம் அறிவிப்பு.!

மேலும், அவர்கள் வந்த வாகனங்களையும், பயங்கரவாதிகள் தீவைத்து எரித்தனர். இதுதொடர்பாக விசாரிக்கையில், பலியானவர்களில் 3 பேர் பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 20 பேர் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 4 மாதங்களாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், பயணிகளை கடத்தி சென்று, அவர்களை அடையாளம் கண்ட பிறகே அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின் எடுக்கப்பட்ட காணொளி: 

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).