Sunita Williams at ISS (Photo Credit: @T_Investor_ X)

ஆகஸ்ட் 25, கலிபோர்னியா (World News): ஸ்டார் லைனர் விண்கலம் உதவியுடன், கடந்த ஜூன் மாதம் 05ம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோருடன் விண்வெளிக்கு பயணித்து இருந்தார். 8 நாட்கள் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. Unified Pension Scheme: ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.! 

பூமிக்கு வருவது எப்போது?

இதனிடையே, அவர்கள் விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி செய்துவந்தபோதே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் பாதிக்கப்பட்டு பூமிக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. மேலும், அவர்கள் மொத்தமாக 80 நாட்கள் அங்கு தங்கியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. நாசா சுனிதா, புட்ச் ஆகியோர் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ராகன் விண்கலத்தின் உதவியுடன் பூமிக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.