Indian Origin Woman Manpreet Kaur Dies: 4 ஆண்டுகள் கழித்து குடும்பத்தை பார்க்க சடலமாக இந்தியா வந்த 24 வயது இளம்பெண்.. நொடியில் நடந்த சோகம்.!
மகளின் வருகைக்காக குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த துயர செய்தியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூன் 02, மெல்போர்ன் (Melbourne): ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து, டெல்லிக்கு பயணிக்க குவான்டஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக காத்திருந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், விமானம் மேலெழும்பும் நடவடிக்கைக்காக காத்திருப்பதை உணர்ந்து சீட்பெல்ட் அணிந்துகொண்டு இருந்தனர். அச்சமயம், விமானத்தில் பயணம் செய்த 24 வயது இந்திய வம்சாவளி பெண்மணி மன்ப்ரீத் கவுர் (Manpreet Kaur), இருகைப்பட்டையை அணிந்துகொண்டிருந்தவாறு திடீரென மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக மீட்ட விமான குழுவினர், உடனடியாக மீட்பு படையினரை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்மணி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Woman Cuts Private Part Of Man: காதலியை கைவிட நினைத்த காதலன்; ஆணுறுப்பை அறுத்து கதறவைத்த காதலி.!
குடும்பத்தினர் சோகம்:
டெல்லியில் அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த உறவினர்களுக்கு, அவரின் மரண செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரபலமான சமையல் கலைஞராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்த கவுர், கடந்த 4 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு கூட செல்லாமல் படித்துவிட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார். விமான பயணத்திற்கு முன்னதாக லேசான உடல்நல பாதிப்புடன் இருந்தவர், விமான பயணம் தொடங்கும் முன்பே உயிரிழந்தார். மன்ப்ரீத் கவுர் காசநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நேர்மையான, கனிவான குணம் கொண்ட கவுரின் மறைவு அவரின் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.