Car Driving File Pic (Photo Credit : Pixabay)

ஜூலை 28, அமெரிக்கா (World News): அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணம் பர்மிங்கா நகரில் வசித்து வரும் 3 வயதுடைய சிறுவன் கே'டோரியஸ் ஸ்டார்க்ஸ். சம்பவத்தன்று சிறுவன் தனது தந்தையுடன் காரில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக சென்ற தந்தை குழந்தையை காரிலேயே விட்டு அங்கிருந்து கடைக்கு புறப்பட்டுள்ளார். பின் நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்தபோது சிறுவன் மூர்ச்சையாகக் கிடந்துள்ளார். ரூ.5.4 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கால்களை அகற்றிய மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்.! 

காரின் வெப்பத்தால் உயிரிழந்த சிறுவன் :

இதனையடுத்து உடனடியாக அங்கிருந்து மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தபோது காரில் இருந்த வெப்பத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு :