ஜூலை 25, பிரிட்டன் (World News): பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் மருத்துவர் ஒருவர் காப்பீட்டுத் தொகைக்காக சொந்த கால்களை அகற்றிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.5.4 கோடி) அளவிலான இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு நீல் காப்பர் என்ற 49 வயதுடைய மருத்துவர் தனது இரண்டு கால்களையும் அகற்றி பின் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி இருக்கிறார்.
அம்பலமான உண்மை :
இதனை தொடர்ந்து காப்பீட்டு நிறுவனத்திற்கு நீல் காப்பர் மீது சந்தேகம் ஏற்படவே, வேண்டுமென்றே அவர் தனது இரு கால்களையும் அகற்றியதாக புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், உடலுக்கு எந்த விதமான தீங்கும் விளைவிக்காமல் அவர் தனது முழங்காலை அகற்றிய உண்மை அம்பலமானது. Russia Plane Crash: ரஷ்ய விமானம் விபத்து.. 46 பேர் கதி என்ன..?
விசாரணையில் பகீர் :
அதன்படி, நீல் காப்பர் மருத்துவர் என்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் கால்களை எப்படி அகற்றுவது தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வீடியோவின் அடிப்படையில் தனது சக மருத்துவ நண்பரின் உதவியுடன் கால்களை அகற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.
மருத்துவர் மீது நடவடிக்கை :
மேலும் கால்களை அகற்றவில்லை என்றால் தனக்கு இருக்கும் இரத்தநாள பிரச்சனை உடல் முழுவதும் பரவி விடும் என காப்பீட்டு நிறுவனத்தை நம்ப வைக்க முயன்றுள்ளார். இதுகுறித்த மருத்துவ ஆதாரங்களை கண்டபோது அவர் கூறியதில் தவறான தகவல்கள் இணைந்தது போன்ற சந்தேகம் இருந்ததால் நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர். தற்போது அதற்கேற்ப மருத்துவர் கூறியது பொய் என தெரியவரவே அவரின் மீது சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.