Car Accident In China: கூட்டத்திற்கு நடுவில் தறிகெட்டு புகுந்த கார்; 35 பேர் பரிதாப பலி..!
சீனாவில் விளையாட்டு மையத்திற்கு வெளியே பொதுமக்கள் மீது கார் மோதியதில், 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 12, பெய்ஜிங் (World News): சீனாவின் தெற்கு நகரமான ஜுஹாய் (Zhuhai) நகரில் உள்ள விளையாட்டு மையத்திற்கு வெளியே நேற்று (நவம்பர் 11) மாலை மக்கள் குழு மீது கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 62 வயது ஓட்டுநரை காவல்துறையினர் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். Barbie Maker Apologises: பார்பி பொம்மைகளில் ஆபாச தளம்.. மன்னிப்புக் கோரிய நிறுவனம்.!
இன்று (நவம்பர் 12) திறக்கப்பட்ட சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஏற்பாடு செய்த ஜுஹாய் ஏர்ஷோவுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் அந்த 62 வயது முதியவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 07:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

