நவம்பர் 12, கலிபோர்னியா (World News): குழந்தைகளுக்குப் பிடித்தமானவை பொம்மைகள். அதிலும் பொம்மைகள் எத்தனை இருந்தாலும் பார்பி (Barbie) பொம்மைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அமெரிக்க வர்த்தகரான ருத் ஹேண்ட்லர் தனது மகள் பார்ஃபராவை மனதில் நிறுத்தி 1959ம் ஆண்டு பார்பி பொம்மையை உருவாக்கினார். இந்த பொம்மைகளை பல நிறுவனங்கள் செய்தாலும், மட்டேல் நிறுவனத் தயாரிப்பான பார்பி பொம்மைகள்க்கு தனி சிறப்புண்டு. அங்கு தயாரிக்கும் அசலாகவே இருப்பது போல் தலைமுடி, நீலநிறக் கண்கள், கவர்ந்திருக்கும் வண்ண வண்ண உடைகள் பார்பி பொம்மைகளின் சிறப்புகள். American Teacher Arrested: 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 43 வயது ஆசிரியை கைது..!
இந்நிலையில், மட்டேல் நிறுவனம் தயாரித்த பேக்கேஜிங்கில் wickedmovie.com என்பதற்குப் பதிலாகப் பெட்டியின் பின்புறம் wicked.com என்ற ஆபாச இணையதளத்தின் லிங்க் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு மட்டேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பார்பி பொம்மைகளில் ஆபாச தளம்:
The official Mattel Wicked dolls link to a porn site on the box 😭😭 pic.twitter.com/iW4mNVAlPE
— just2good (Sarah Genao) (@just2goodYT) November 9, 2024