3 Year Old Baby Killed in Ohio (Photo Credit: @unlimited_ls X)

மே 05, ஓஹியோ (World News): அமெரிக்காவில் உள்ள ஓஹியோ (Ohio Crime News) மாகாணம், கிலீவ் லேண்ட், நார்த் ஓலம்ஸ்டெத் பகுதியில் ஜெயிண்ட் ஈகிள் என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் மார்கோட் வுட் என்ற 30 வயது பெண்மணி, தனது ஜூலியன் வுட் என்ற 3 வயது கைக்குழந்தையுடன் வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல்:

அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்கு வர தயாராக இருந்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த பெண்மணி ஒருவர், திடீரென தாய் - மகனை கொடூரமாக கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Chandrababu Naidu on NDA Alliance: "தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பது உறுதி" - சந்திரபாபு நாயுடு அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

பச்சிளம் குழந்தை பலி:

நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு 3 வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மார்கோட் வுட் லேசான காயத்துடன் உயிர்பிழைத்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்ட 32 வயதுடைய பாயோன்கா எல்லிஸ் என்ற பெண்ணை கைது செய்தனர்.

சர்ச்சைக்குரிய பெண்மணி கைது:

இவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்மார்ட் பகுதியில் கூடசெயலில் ஈடுபட்டு பின் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மீண்டும் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக செலுத்த நேரிடும் என காவல்துறையினர் கூறுகின்றனர்.