ஜூன் 05, விஜயவாடா (Andhra Pradesh News): 2024 மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி, 18 வது மக்களவை அரசை ஏற்க பாஜக தயாராகி வருகிறது. 235 தொகுதிகளில் கூட்டணியுடன் வெற்றி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான எஞ்சிய 37 தொகுதிகளை மாநில வாரியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை வைத்து கைப்பற்றவும் காய் நகர்த்தி வருகிறது.
ஆந்திராவில் ஆட்சிமாற்றம்:
அந்த வகையில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் (Telugu Desam) கட்சி நடப்பு ஆண்டில் பாஜக மற்றும் ஜனசேனா கட்சியுடன் இணைந்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வரவுள்ள நிலையில், மக்களவை தொகுதிகள் வேட்பாளர்களையும் வென்றுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் கட்சியின் பக்கம் இழுக்க திரைமறைவில் வேலைகள் நடந்து வருகிறது.
சந்திரபாபு மனதார நன்றி:
இந்நிலையில், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu), "மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியினை வெற்றிபெற்ற வைத்த ஒவ்வொரு வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. ஆந்திர மக்கள் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து தெலுங்கு தேசம் கட்சிக்காக வாக்களித்து மகிழ்ச்சியாக சென்றனர். Live Firing In Swimming Pool: நீச்சல் குளத்தில் மகள்கள் கண்முன்னே தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பல்; சிசிடிவி கேமிராவில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!
மக்களுக்கான உறுதி:
இந்த சட்டப்பேரவை தேர்தலில் மாநில அளவில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அபார வெற்றி அடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், தெலுங்கு தேசத்தை தேர்வு செய்துள்ளனர். மக்கள் பணிகளை நாங்கள் திறம்பட செய்து அவர்களின் துயரை துடிக்க அரசு இயந்திரத்தை செயல்படுத்துவோம்.
பாஜகவுடன் மட்டுமே கூட்டணி:
தெலுங்கு தேசத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி மக்களுக்கான வெற்றி ஆகும். தேசத்தை காப்பாற்ற பாடுபட வேனெடும் என்ற எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வெற்றியை அடைந்துள்ளோம். ஒய்.எஸ்ஆர் கட்சியால் தற்போது எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட உறுதி செய்ய முடியவில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். அம்முடிவில் உறுதியாக இருக்கிறோம்" என பேசினார்.
தற்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி காட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார். அங்கு கூட்டணிக்கட்சியான பாஜக தலைமையுடன் ஆலோசனை நடத்தி, மேற்படி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.