Baby Girl Dies in Hot Car: 3 மணிநேரம் மூச்சுத்திணறி பலியான 11 வயது குழந்தை.. காருக்குள் பூட்டிவைத்து சென்ற பெற்றோரால் சோகம்.!
குழந்தையை காருக்குள் அடைத்து வைத்து சர்ச் வேலை செய்ய சென்ற பெற்றோர், இறுதியாக தங்களின் மகளை சடலமாக மீட்டனர்.
ஜூன் 02, புளோரிடா (Florida Shocking News): அமெரிக்காவில் (America) உள்ள புளோரிடா மாகாணம், பால்ம் பே (Palm Bay, Florida) பகுதியை சேர்ந்த தம்பதி, சம்பவத்தன்று அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.
இவர்கள் தங்களின் காரில் தேவாலயத்திற்கு சென்ற நிலையில், உடன் தனது 11 வயது பெண் குழந்தையையும் அழைத்து சென்றுள்ளனர். தம்பதி மட்டும் தேவாலயத்திற்கு சென்ற நிலையில், குழந்தை காரிலேயே இருந்துள்ளது.
தம்பதிகள் குழந்தையை காரின் ஜன்னல் போன்றவற்றை முழுவதுமாக அடைத்து அங்கிருந்து சென்றதாக தெரியவருகிறது. இதனால் கார் வெப்பமாகி, அந்த வெப்பக்காற்றை குழந்தை 3 மணிநேரம் சுவாசித்துள்ளது. Father Killed Baby Girl: பச்சிளம் சிசு அடித்தே கொலை; பெண் குழந்தையாக பிறந்ததால் தந்தை வெறிச்செயல்.!
தம்பதிகள் தேவாலயத்தில் தங்களின் வேலை நிறைவு பெற்றதும், 3 மணிநேரம் கழித்து வந்து பார்க்கையில் மகள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு சிறுமியின் இறப்பு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

