ஜூன் 02, பிலிபிட் (Uttar Pradesh Crime News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியை சேர்ந்தவர் முகம்மது பர்ஹான் (வயது 32). இவரின் மனைவி ஷாபிபா பேகம் (வயது 28). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரின் ஒற்றுமை வாழ்க்கைக்கு சாட்சியாக 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், முகம்மதுவுக்கு பெண் ஆண் குழந்தை தனக்கு வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதற்காக மனைவியை மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள நிர்பந்திக்க, அவரும் கணவரின் ஆசைக்கு இணங்கியுள்ளார். நேற்று முன்தினம் பேகத்திற்கு குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தையே பிறந்துள்ளது. Kanyakumari Express: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க சதி; தண்டவாளத்தின் நடுவே டயர் வைத்து அட்டகாசம்.!
தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தி கேட்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்த முகம்மது, பெண் குழந்தை பிறந்ததை பார்த்து ஆத்திரமுற்றுள்ளார். குழந்தையை தான் கொஞ்சி வருவதாக தூக்கி சென்றவர், பச்சிளம் குழந்தை என்றும் பாராது அதனை சுவற்றில் அடித்து, உயரத்தில் இருந்து கீழே வீசியுள்ளார்.
இதனால் பச்சிளம் குழந்தை நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியானது. சம்பவம் தொடர்பாக முகம்மதின் மனைவி பேகம் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.