Family Found Dead: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு.. கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை..!
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் கொண்ட குடும்பம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 28, நியூயார்க் (World News): அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) நகரில் வசித்து வரும் தம்பதி பால் ஸ்வார்னர் (வயது 35) - கரேன் (வயது 32). இத்தம்பதிக்கு ஈவ்லின் (வயது 5) மற்றும் கானர் (வயது 1) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று காலை இவர்கள் 4 பேர் வீட்டில் சடலமாக கிடந்தனர். ஸ்வார்னரின் தந்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். Gaza Ceasefire: முடிவுக்கு வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்..!
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அதிகாரிகள் வீட்டில் இருந்து ரகர் - 22 ரக துப்பாக்கியை மீட்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், பால் ஸ்வார்னர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை (Shot Dead) செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

