
ஜனவரி 27, ஹமாஸ் (World News): பாலஸ்தீனத்தின் ஆதரவு ஆயுதக் குழுவான ஹமாஸ் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 20 நிமிடங்களில் 5000க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏறி இஸ்ரேலை திணறடித்தது ஹமாஸ். மேலும் ஏராளமான ஹமாஸ் படையினர் பேராஷூட் மூலமாக எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுமட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சிறைபிடித்து சென்றனர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்:
ஹமாஸின் திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் (Israel Hamas War) தொடுப்பதாக அறிவித்தது. ஹமாஸின் கடைசி நபரினை அளிக்கும் வரை இந்தப் போர் தொடரும் என்று சூளுரைத்தது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தெக்ரானில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் கூறியது. Trump Vs Colombia: சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்க மறுத்த கொலம்பியா.. கடுப்பான டிரம்ப்.!
அதன்படியே தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என்றும் மிரட்டியது. மேலும் இஸ்ரேலை ஒடுக்க அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்தது. இதனால் உலகப்போர் பீதி உருவானது. இந்த போரினால் பல மக்கள் தங்களது இருப்பிடத்தினை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக நாடு கடந்து செல்கின்றனர். அதைவிட கொடூரம் மனிதாபிமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
காசாவில் போர்நிறுத்தம்:
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் காசா போர் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது.