Germany Fire: ஜெர்மனி நாட்டின் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து.. 4 பேர் பலி..!
ஜெர்மனி நாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மார்ச் 04, பெட்பர்க்ஹாவ் (Bedburg-Hau): ஜெர்மனியின் (Germany) மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் (North Rhine-Westphalia state) பெட்பர்க்ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று உள்ளது. பல செவிலியர்கள் பணியாற்றக் கூடிய இந்த காப்பகத்தில் திடீரென தீ விபத்து (massive fire) ஏற்பட்டது. ISRO Chief Somanath: இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் உறுதி.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
இத்தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் தெரிய வரவில்லை. தற்போது இந்த சம்பவம் பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 09:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

