மார்ச் 04, புதுடெல்லி (New Delhi): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) தற்போதைய தலைவராக இருப்பவர் எஸ்.சோம்நாத் (S Somanath). இவர் சந்திரயான் 3 (Chandrayaan-3) மற்றும் ஆதித்யா எல் 1 (Aditya-L1) ஆகிய திட்டங்களின் போது இஸ்ரோ தலைவராக இருந்து மற்ற விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியுாக இருந்தார்.
இந்த நிலையில் வானிலை மாற்றங்கள் தொடர்பான செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், "சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன. இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாக தெரியவில்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை செய்தேன். ஆத்தியா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவிய அன்று இரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது” என கூறியுள்ளார். Rolls Royce Arcadia Droptail: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய சொகுசு கார்.. ஆர்கேடியா டிராப்டெயில் வெளியீடு..!
மேலும் பேசிய அவர், "ஆதித்யா எல் 1 ஐத் தொடர்ந்து, நான் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்த பின் கீமோதெரபியும் செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் நான் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வேன். ஆனால் நான் இப்போது முழுமையாக குணமடைந்துவிட்டேன். மீண்டும் நான் எனது வேலைகளை தொடங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.