Nepal Plane Crash: பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து; 19 பயணிகளின் நிலை என்ன..?
நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 24, காத்மாண்டு (World News): நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் (Tribhuvan International Airport) இன்று (ஜூலை 24) காலை சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் புறப்படும் போது ஓடு தளத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நேபாளத்தில் இருந்து போக்ரா செல்லும் விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bus Crash: சவூதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி.. புனித யாத்திரை பயணத்தில் சோகம்.!
IBM Layoffs: ஐபிஎம் பணிநீக்கம்; ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிப்பு.. காரணம் என்ன..?
Plane Crash: சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்.!
K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..!
Advertisement
Advertisement