ஜூன் 13, தோடா (Jammu and Kashmir News): ஜம்மு காஷ்மீரில் உள்ள ரைசி பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி அன்று சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்தானது பள்ளத்தில் விழுந்தது. இதில் ஒன்பது பேர் பலியாகினர், 41 பேர் காயமடைந்தர். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் உள்ள குடியிருப்பில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதே நாளன்று தோடா பகுதியில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடியை குறி வைத்தும் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். International Albinism Awareness Day 2024: சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்.. இது தொற்றுநோயா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?.!
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு தோடா மாவட்டம் காந்தோ பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதனை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்து அங்கு சென்றனர். அங்கே இருவருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சிறப்பு காவலர் ஃபரித் அகமத் என்பவர் காயம் அடைந்தார். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பதேர்வா, தாத்ரி, காண்டோஹ் பகுதிகளின் மேல் பகுதியில் இருப்பதாக நம்பப்படும் நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த தீவிரவாதிகள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.