Alien Body Recovered: சடலமாக மீட்கப்பட்ட குட்டி ஏலியன்.. பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.!

வானியல் ஆராய்ச்சிகள் தொடங்கியபோதே வேற்றுக்கிரவாசிகள், அவர்களின் நடமாட்டம் குறித்த கேள்விகள் எழத்தொடங்கிவிட்டன. ஆனால், அவற்றின் உண்மைகள் மட்டும் இன்று வரை தெரியவில்லை.

Alien Body Recovered: சடலமாக மீட்கப்பட்ட குட்டி ஏலியன்.. பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.!
Alien Cartoon Pic | Visual from Bolivia Died Alien Issue (Photo Credit: Twitter)

ஏப்ரல் 05, பொலிவியா (Alien News): தென்னமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia), லா பாஸ் மாகாணம், ஹுரினா நகரில் 1200 மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2001ம் ஆண்டில் இருந்தே கிராமத்தின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கி, இன்று அங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் வானில் அடையாளம் தெரியாத (UFO) பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக கூறப்படும் நிலையில், வேற்றுகிரகவாசி (Alien Found Died) என்று அழைக்கப்படும் குட்டி ஏலியன் உருவம் உயிரிழந்து கிடந்துள்ளது. Kannada YouTuber: ஆபாச படத்துல நடிப்பீங்களா?.. கேள்வி கேட்ட யூடியூபர் மீது புகார் கொடுத்த நடிகை.!

இதனை அப்பகுதி மக்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, களத்திற்கு செய்தி நிறுவனங்களும் செய்தியை சேகரிக்க சென்று இருக்கின்றன.

ஏலியன் இறந்த நிலையில் மீட்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வானில் அவ்வப்போது பச்சை நிற ஒளிபொருந்திய மர்ம தட்டு அங்கும் இங்குமாக பறந்து சென்றதாகவும் கூறப்படுகின்றன. இதுகுறித்து தற்போது வரை அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விசாரணை நடந்து வருவதாக கூறுகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).