Girl Friend Killed: கார் நிறுத்தத்தில் தகராறு; 34 வயது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 29 வயது இளைஞர்..!
காதலியுடன் ஆசையாக மாலுக்கு சென்றவர், கார் நிறுத்தத்தில் காருக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து தப்பி சென்று பின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 26, நியூயார்க் (New York): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா (California) மாகாணம், ரோசேவில்லே நகரில் வசித்து வருபவர் சிம்ரஞ்சித் சிங் (வயது 29). இவர் அமெரிக்காவாழ் இந்தியர் ஆவார். இவருக்கு 34 வயதுடைய பெண் தோழி இருக்கிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது காதலியை காலெரியா மாலுக்கு அழைத்து சென்றிருந்த நிலையில், அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, 5 தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடத்தில் காரில் இருந்தபோது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். PM Modi Speech at ISRO: இந்தியாவில் முதல்முறை.. ஆகஸ்ட் 23-ல் தேசிய விண்வெளி தினம் அறிவிப்பு - இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பிரதமர் பெருமிதத்துடன் உரை..!
பின்னர், துப்பாக்கியை காரில் போட்டுவிட்டு, காதலி இறந்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த விசயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பலியான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து குற்றவாளியான சிம்ரஞ்சித் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமினில் வெளியே வர இயலாத பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். அவர் எதற்காக காதலியை கொலை செய்தார்? என விசாரணை நடந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 26, 2023 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

