ஆகஸ்ட் 26, பெங்களூர் (Bangalore): கடந்த ஜூலை 14ம் தேதி மதியம் 02:35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 (Chandrayaan 3) செயற்கைகோள் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, உலக வரலாற்றில் மிகப்பெரிய புதிய சாதனையை படைத்தது. இஸ்ரோவின் (ISRO) சாதனையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் நட்பு நாடான ரஷியா (Russia) தனது உள்ளம்கனிந்த பாராட்டுகளை தெரிவித்து இருந்தது.
சந்திராயன் 3 வெற்றிபெற்ற தருணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடி இருந்தனர். இஸ்ரோவின் தலைவர் மயில்சாமி, சந்திராயன் 3 செயல்திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு உலகளவிலும், இந்திய அளவிலும் பாராட்டுக்கள் கிடைக்கின்றன. இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது அதில் தனிச்சிறப்பாகவும் அமைந்தது.
இந்த வெற்றியின்போது தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் (BRICS Summit 2023) உச்சி மாநாடு 2023ல் கலந்துகொண்டு இருந்ததால், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே உரையாற்றி தனது பாராட்டுகளை தெரிவித்தார். இந்தியாவின் விண்வெளி சாதனை வெற்றியின் மகிழ்ச்சி அவரின் முகத்தில் புன்னகையாய் தெரிந்தது. Madurai Train Fire: சுற்றுலாப்பயணிகள் இரயிலில் பயங்கர தீவிபத்து; 5 பேர் பலி, பலர் படுகாயம்.. சிலிண்டரில் சமைத்தபோது பயங்கரம்.!
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ விண்வெளி தலைமை கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்றார். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து தரைவழி மார்க்கமாக அவர் பயணித்தார். இஸ்ரோ நிலையத்திற்கு சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பும் வழங்கப்பட்டது.
அங்கு விஞ்ஞானிகளிடையே பிரதமர் உரையாற்றியபோது, "இன்று நான் வித்தியாசம் கொண்ட மகிழ்ச்சியை உணருகிறேன். இதுபோன்ற சந்தர்ப்பம் நமக்கு மிகவும் அரிதான விஷயங்களில் ஒன்றாகும். இம்முறை நான் அமைதியற்றவனாக இருந்தேன். அப்போது, நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், எனது மனம் உங்களுடன் இருந்தது.
விரைவாக உங்களை சந்தித்து வணக்கம் தெரிவிக்க நான் ஆவலோடு காத்திருந்தேன், விரும்பினேன். உங்களின் முயற்சிகளுக்கு எனது வணக்கம். சந்திராயன் 3 தரையிறங்கிய இடம் இனி சிவசக்தி (Shivshakti) என அறியப்படும். இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்தியா நிலவில் கொடிபதித்த நாள், இந்திய தேசிய விண்வெளி தினமாக (National Space Day) கொண்டாடப்படும். AI School in Kerala: செயற்கை தொழில்நுட்பத்தை கையில் எடுத்த கேரளபள்ளி: முன்னாள் பிரதமர் துவங்கி வைத்தார்..!
சந்திராயன் 2 (Chandrayaan 2) தனது கால்தடத்தை பதிவு செய்த இடம் திரங்கா (Tiranga) என்று அழைக்கப்படும். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் இது புதிய உத்வேகத்தை அளிக்கும். எந்த தோல்விக்கும் இறுதி தோல்வி அல்ல என்பதை அது நமக்கு நினைவூட்டும். சந்திராயன் 3 வெற்றியில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.
சிவசக்தி புள்ளி எதிரிகளை தலைமுறை மக்களின் நலனை அறிவியலுக்கு பயன்படுத்த ஊக்குவிக்கும். மக்களின் நலன் எங்களின் கடமை ஆகும். சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித்துறை 8 பில்லியன் டாலரில் இருந்து, 16 பில்லியன் டாலராக மாறும் என்று கூறுகிறார்கள்" என பேசினார்.
#WATCH | Prime Minister Narendra Modi meets ISRO chief S Somanath and other scientists of the ISRO team involved in #Chandrayaan3 Mission at ISRO Telemetry Tracking & Command Network Mission Control Complex in Bengaluru and congratulates them for the successful landing of… pic.twitter.com/D4icGMVAkP
— ANI (@ANI) August 26, 2023