Plane Catches Fire Mid-Flight: நடுவானில் பற்றி எரிந்த விமானம்... நடந்தது என்ன?.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பற்றி எரிந்துள்ள விமானத்தின் வீடியோவானது, தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Plane Catches Fire Mid-Flight: நடுவானில் பற்றி எரிந்த விமானம்... நடந்தது என்ன?.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!
Plane Catches Fire Mid-Flight (Photo Credit: @rawsalerts X)

டிசம்பர் 19, மியாமி (Miami): மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) இருந்து நேற்று இரவு 10:46 மணியளவில் அட்லஸ் ஏர் விமானம் 95 (Atlas Air flight 95) புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம் முழுவதும் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த விமானம் ஆனது போட்டோ ரிக்கோவின் ஜான்ஜுவான் நகருக்கு (San Juan, Puerto Rico) செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் இந்த பயணத்தின் போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. அதனால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. தற்போது நடு வானில் விமானம் பற்றி எரிந்த வீடியோவானது இணையம் வைரல் ஆகி வருகிறது. Ather Energy launches ExpressCare: ஏத்தரின் எக்ஸ்பிரஸ் கேர் திட்டம் அறிமுகம்.. 60 நிமிடத்தில் சர்விஸ்..!

(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).