China Earthquake: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... டெல்லி வரை உணரப்பட்ட அதிர்வு..!
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி வரை உணரப்பட்டதாக தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜனவரி 23, பெய்ஜிங் (Beijing): சீனாவின் தெற்கு சின்சியாங் பகுதியில் இரவு 11 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு பதிவாகியுள்ளது. இதனால் நள்ளிரவில் தூக்கிக் கொண்டிருந்த பொதுமக்கள், அலறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி மற்றும் பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Heart Attack Death: ஹனுமான் வேடமிட்டு நடனமாடிய கலைஞர் மாரடைப்பால் மரணம்; நொடியில் பிரிந்த உயிர்..!
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி சீனாவின் இந்த பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

