Visual from Video (Photo Credit: @TheSamacharlive X)

ஜனவரி 23, பிவானி (Haryana News): அயோத்தி மாநகரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமர்சையாக நடைபெற்ற முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேக பணிகளில் நேரடியாக கலந்து கொண்டு கோவிலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்தியாவிற்கும் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் அயோத்திக்கு நேரில் சென்று இருந்தனர். தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் ராம் சரண், சிரஞ்சீவி உட்பட பலரும் அயோத்தி சென்றிருந்தனர்.

சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு: இந்தியாவில் உள்ள பிற கோவிகளில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அயோத்தி செல்ல இயலாத பக்தர்கள் பலரும், நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டுகளித்தனர். சிறப்பு நிகழ்ச்சிகளும் விமர்சையாக நடைபெற்றன. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பிவானி, ஜெயின் சௌக் பகுதியில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடமிட்ட ஹரிஷ் குமார் என்பவர் ஸ்ரீ ராமரின் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். Covai News: லிப்ட் கேட்பது போல் நடித்து செல்போன் பறிப்பு.. கோவையில் பரபரப்பு..! 

மயங்கி விழுந்து மரணம்: அச்சமயம் அவர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் காட்சியில் நடிக்கிறார் என நினைத்து பலரும் அமைதியாக இருந்த நிலையில், ஒரு சில நிமிடங்கள் கடந்தும் அவர் எழுந்திருக்காததால் உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்து உயிர் மாரடைப்பால் பிரிந்தது தெரியவந்துள்ளது. அவரது மரணம் முன்னதாக பதிவு செய்யப்பட்ட காணொளியில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.