Alien UFO Sightings: விமானத்தை விட வேகமாக 3 மர்ம வாகனங்கள்.. நடுவானில் நடந்த சம்பவத்தால் ஏலியன் அச்சம்..!
3 விமானத்தின் விமானிகள் வெவ்வேறு இடங்களில் இங்கிலாந்துக்குள் வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டை நடுவானில் பார்த்தாக தெரிவிக்கின்றனர்.
அக்டோபர் 10, இலண்டன் (World News): இங்கிலாந்தில் உள்ள லண்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரியான் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 4000 அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது.
அந்த விமானம் 230 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்த நிலையில், விமானி மற்றும் விமானப்பயணிகள் 230 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் ஒரு வானியல் பொருளைக் கண்டுள்ளனர்.
முதலில் அது ட்ரோனாக இருக்கலாம் என்று தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மர்ம பொருளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அது டிரோனாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், கவனமுடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல, நேற்று மட்டுமே மூன்று வெவ்வேறு இடங்களில் 3 மர்ம பொருட்கள் நடுவானில் தெரிந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அது வேற்றுக்கிரகவாசிகளின் வாகனமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 10, 2023 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

